www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், நவம்பர் 08, 2017

‘நான் மதம் மாறவில்லை!’- மறுக்கிறார் வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதமாற்றம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்த நிலைமையில், அதில் உண்மையில்லை என வைகோ விளக்கமளித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவர் தினமும் பைபிளை இரண்டு வேளைகள் வாசித்து வருவதாகவும், இறைப்பணி செய்வது குறித்து தன்னிடம் கருத்துகள் கேட்பதாகவும் கிறிஸ்தவ பாதிரியார் மோகன் லாசரஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்பது உறுதியானது மாதிரியான தகவல்கள் வெளியாகின.

இதை மறுத்துள்ள வைகோ, ‘நான் கிறித்தவன் அல்ல. எல்லா மதங்களையும் மதிக்கிறேன். என் மருமகள் வீட்டில் பூஜை அறை இருக்கிறது. அதில் எல்லா கடவுள்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நான் மதம் மாறிவிட்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை. லாசரஸ் அதீத உற்சாகத்தில் அந்த தகவலை வெளியிட்டிருக்கக் கூடும். எங்கள் சொந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலை நானும், என் தம்பியும்தான் பராமரிப்போம். என் மகள் ஒரு கிறித்தவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது உண்மைதான். ஆனால், லாசரஸ் சொல்வதில் உண்மையில்லை’ என தெரிவித்துள்ளார்.