www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், நவம்பர் 20, 2017

கிழக்கில் இடைக்கால அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது கூட்டமைப்பு

புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்களை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை
மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளது. திருகோணமலை நகரமண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கும்; கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கும்; மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்களை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளது. திருகோணமலை நகரமண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கும்; கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கும்; மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

 
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர்.கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்துகொள்ள அனைவரையும் அழைப்பதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.