www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 09, 2017

தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே இயங்கும்! - விக்னேஸ்வரன்

என்னை, இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, என்னுடன் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
என்னை, இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, என்னுடன் வந்து பேசுவாராயின் பலவற்றில் தெளிவடைந்து கொள்வார் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளும் தெற்கிலுள்ள வீரவன்ச போன்ற இனவாதிகளும் இன்று ஒரு மூலைக்குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில், வடக்கிலும் தெற்கிலும் மூலையில் ஒதுங்கியிருக்கும் இனவாதிகளைச் சேர்த்துக்கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் நேற்று முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்கையிலையே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, “தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. தமிழ் மக்கள் பேரவைக்குள் கருத்தொருமித்த அரசியல் கட்சிகள் உள்ளன. அவை தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும். அது தொடர்பான எனது தனிப்பட்ட எண்ணத்தை என்னால் இப்போது கூறமுடியாது” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார