புதன், ஜனவரி 31, 2018

வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள்! - ஐதேக வாக்குறுதி


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. வவுனியா கலைமகள் மைதானத்தில், இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது
இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.