வெள்ளி, ஜனவரி 26, 2018

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி

2010இல்வ பிறேமசந்திரனும் 2015இல் சிவசக்தி ஆனதணும் எவ்வளவு லஞ்சம் வாங்கியவர்கள் வரவுசெலவு திட்டத்தை
ஆதரிக்க அரச கட்டிடத்தில் இலவசமாக இருக்கும் சிவசக்தி ட்டத்தை 2 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி தேர்தல் காலத்தில் ஒரு பரப்புரைக்காக தெரிவி vக்கின்றார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியுள்ளதாக ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் தேர்தல் காலத்தில் ஒரு பரப்புரைக்காக முன் வைத்துள்ளார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.-

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(26) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் எங்கள் மக்களுடைய அரசியல் ரீதியான நகர்வுக்காக முழுமையாக செயல் பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம்.

-அந்த வகையில் மக்களுக்கு துரோகம் செய்கின்ற வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலஞ்சம் வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

மேலும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் கருத்து பொய்யாக இருக்கின்ற பட்சத்தில் அவர் அதற்கு மாற்றீடாக என்ன செய்வார்? இலஞ்சம் வாங்கியதை அவரினால் நிரூபித்து காட்ட முடியுமா?என்பது தான் தற்போதைய கேள்வி.இன்று நீண்ட காலமாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாவட்டச் செயலகத்திற்குற்பட்ட அலுவலகத்தை நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனாந்தன் பயன்படுத்தி வந்துள்ளார்.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இன்று இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் அரசாங்கத்தில் இருக்கின்ற ஒரு கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனாந்தன், பயண்படுத்தியுள்ளதோடு, அமைச்சர் றிஸாட் பதியுதீன் , சந்திரகுமார் ஆகியோருக்கும் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டிருந்தது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சோரம் போய் விட்டார்கள் என்று கூறுகின்ற சிவசக்தி ஆனாந்தன் எம்.பி என்ன அடிப்படையில் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுடைய ஒரு கட்டிடத் தொகுதியினை தன்னுடைய அலுவலகமாக பயண்படுத்துவதற்கு அவர் எத்தனை கோடி வாங்கி மக்களுக்கு துரோகம் செய்தார் என்பதையும்,அவர் மக்களுக்கு தெழிவு படுத்த வேண்டும்.

-தேர்தல் காலத்தில் பொய்ப்பிரச்சாரங்களையும்,குற் றச்சாட்டுக்களையும் மக்கள் மத்தியில் முன் வைப்பதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது.

குறிப்பாக எங்களுடைய பிரதேசங்களில்,கிராமங்களில் மக்கள் எங்களிடம் கேட்கின்ற தங்களுடைய கிராமங்களில் இருக்கின்ற கட்டமைப்புகளுக்காக நாங்கள் பல அமைச்சுக்களிடம் குறிப்பாக நெடுஞ்சாலை அமைச்சு,தேசிய நல்லிணக்க அமைச்சு, பொருளாதார அமைச்சு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு போன்ற 4 அமைச்சுக்களிடமும் எங்களுடைய கிராம கட்டமைப்பு சார்பாக முன்மொழிவுகளை நாங்கள் கொடுக்கின்றோம்.

-நாங்கள் 10 முன்மொழிவுகளை வைக்கின்ற போது அவற்றில் இரண்டு முன்மொழிவுகளை அவர்கள் செய்கின்றார்கள்.

குறித்த முன் மொழிவுகள் கிராமங்களின் கட்டமைப்புக்காக நாங்கள் அரசாங்கத்திடம் சண்டையிட்டு அக்கிராம மக்களுக்காக செய்கின்ற சேவை.

-நாங்கள் மக்களுக்கு செய்கின்ற சேவையை நாங்கள் இலஞ்சம் வாங்கியதாக கூறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு நாங்கள் செய்கின்ற உதவியை எந்த வகையில் இலஞ்சம் வாங்கியது என்று அவர் கூறுவார்.?கூற முடியாது.

-இதே கருத்துக்களை தெரிவிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைவதற்கு முன்னர் அவர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராக இருந்துள்ளார்.

-அப்படி இருந்தவர் மற்றும் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் எத்தனை கொலைகளை செய்துள்ளார், மக்களிடம் கப்பம் பெற்றுள்ளார் என்பது தொடர்பில் வவுனியா மக்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படாது விட்டால் அவர்கள் என்றோ அடிபட்டு போயிறுப்பார்கள்.

ஆனால் இன்றைக்கு தங்களுடைய கட்சியினுடைய அரசியல் இல்லாது போய்விடும் என்பதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

உண்மையில் நாங்கள் குற்றம் இழைத்திருந்தால் அப்படியான ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு ஒரு நியாயம் இருக்கின்றது.

நாங்கள் எக்காலத்திலும்,எந்த நேரத்திலும் மக்களுக்கும் குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருக்கு வாழ்க்கையில் துரோகம் செய்ய மாட்டேன்.

நான் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வெளிப்படையாக சொல்லி இருக்கின்றேன்.

எங்களுடைய தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருடைய கொள்கைக்கு ஒரு போதும் துரோகம் இழைக்கின்ற வகையில் எந்தக்காலத்திலும் நான் செயல்பட மாட்டேன்.

-அப்படி ஒரு துரோகம் இழைக்கின்ற நிலைக்கு வந்தால் குறிப்பாக மக்களுக்கு துரோகம் செய்கின்ற நிலை வந்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவதை தவிர வரலாற்றில் துரோகம் செய்கின்ற ஒரு பதிவை நான் வாழ்க்கையில் செய்ய மாட்டேன்.

-மேலும் வரவு செலவு திட்டத்தில் 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி வந்த நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முதல் முதல் மஹிந்த ராஜபக்ஸவின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியது.

-அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுரேஸ் பிரேமச்சிந்திரன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.

அப்போது சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் எத்தனை கோடி ரூபாய் மஹிந்த ராஜபக்ஸவிடம் வேண்டி ஆதரவழித்தார் என்பதனை அவர் மக்களுக்கு தெழிவு படுத்தட்டும்.

-அதே போன்று 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த பின்பு பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவு திட்டத்தில் சிவசக்தி ஆனந்தனும் ஆதரவழித்தவர்.

எனவே மக்களை ஏமாற்ற முடியும் என பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் உங்களை அரசியலில் இருந்து தூக்கி வீசுவார்கள் என்ற அச்சத்தில் எதை கதைப்பது என்று தெரியாமல் அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் .என அவர் மேலும் தெரிவித்தார்.