www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜனவரி 05, 2018

கனடாவை தாக்கிய மோசமான பனிப்புயல்: குறைந்தது 3நாள் பொருட்களை சேமியுங்கள்

அட்லான்டிக் கனடாவை நேற்று மிக மோசமான பனிப்புயல் தாக்க்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து பாகங்களிலும் பனியுடன் கூடிய காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.

சில வேளைகளில் மணிக்கு 140 கிலோமீட்டர் வரையில் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உருவானது.

பனிச் சூறாவளி என்று கூறப்படும் இந்த பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியத்தில் இருந்து நேற்று கனடாவை வந்தடைந்தது.

இதனால் கனடாவின் அட்லான்டிக் பிராந்திய மாநிலங்களில் 40 சென்ரிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பனிப்புயல் இன்றும் தொடரக்கூடும் எனவும், இதன்போது வீசக்கூடிய 140 கிலோமீட்டர் வேகமான காற்று பலத்த சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக மின்வினியோகம் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தது 72 மணி நேரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்குமாறும், குறிப்பாக அவசர உதவிப் பொருட்கள், உணவு, நீர், மின்கலம், மின்கலத்தில் இயங்கும் வானொலி, முதலுதவிப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள், உடல்நலக்குறைவை எதிர்நோக்குவோருக்கான மருந்துப் பொருட்கள் என்பற்றை தயார்படுத்திக் கொள்ளுமாறும் நியூ பிரவுன்ஸ்விக் மக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.