புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்


கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரைச்சி பிரதேச சபை அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கைது
செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா 30,000 ரூபா அபராதம் விதித்தார்
அழகு நிலையத்தை நடத்தி செல்ல செலுத்தப்பட வேண்டிய வருட வரிக்கு சலுகை வழங்குவதற்காகவே அவர் இலஞ்சம் பெற்றுள்ளார். அழகு நிலைய உரிமையாளர் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு அதிகாரிக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த அதிகாரி இலஞ்சப்பணத்தை பெற முற்பட்ட சந்தர்பத்தில் கைது செய்யப்பட்டார்.

ad

ad