புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2018

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு நிதியை பெற்றுக் கொண்டார்? - சுமந்திரன்

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதரவாக வாக்களித்துள்ளார் அப்போது போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு கோடி ரூபாய் வீதம் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிவசக்தி ஆனந்தன் கடந்த காலங்களில் பல வரவுசெலவு திட்டங்களுக்கு வாக்களித்துள்ளார். 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரண்டு வரவுசெலவு திட்டங்களுக்கும் வாக்களித்துள்ளார். இந்நிலையில், வரவுசெலவு திட்டங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் ஆதரிக்க வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தால், இதற்கு முன்னர் வாக்களித்த ஒவ்வொரு வேளையிலும் அவர் எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை தயவு செய்து அவர் மக்களுக்கு கூற வேண்டும். இதேவேளை, உளவு வேலை பார்ப்பதற்காக வவுனியாவில் அடுக்குமாடி வீடொன்று சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் வழங்கப்பட்டிருந்தது. இப்படியானவர் என்ன துணிச்சலோடு எங்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்?”என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad