www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜனவரி 08, 2018

பிரபாகரனின் படம், புலிச் சின்னத்துடன் பேஸ்புக்கில் புத்தாண்டு வாழ்த்து பதிவேற்றிய இருவர் கைது!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புத்தாண்டு வாழ்த்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றிதாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான செவனு தினேஷ்குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்