புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்..

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.



போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு இன்று காலை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. முன்னதாக பலமுறை பணிக்குத் திரும்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டும், முறையான தீர்வு கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிடும் முடிவு இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் 0.13 காரணி உயர்வு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. 2.44 காரணி ஊதிய உயர்வு தருவதாக அரசு தெரிவித்திருந்தாலும், மற்ற அரசு ஊழியர்களைப் போலவே தங்களுக்கும் 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்கவேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7,000 கோடியை திரும்ப வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் தொழிற்சங்கங்கள் தாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் என்பவரை நியமிப்பதாக தெரிவித்தனர். 2.44% அல்லது 2.57% ஊதிய உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்தியஸ்தரே தீர்மானிப்பார் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. நாளை காலை 

ad

ad