www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, ஜனவரி 06, 2018

யாழ். செல்லும் பிரிட்டன் எம்.பிக்கள் குழு முதலமைச்சரை சந்திக்காமல் புறக்கணிப்பு?

வடக்கிற்கு இன்று செல்லவுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினர் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்திக்க உள்ளனர். இதன் பின்னர் அவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட உள்ளதுடன், யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன் கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.