புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2018

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்! - ஈபிஆர்எல்எவ்வுக்கு சிறிதரன் எச்சரிக்கை

ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும், செயலாளரும் கனடா நாட்டுக்கு செல்ல முடியாதுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஈபிஆர்எல்எவ்வினர் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும், செயலாளரும் கனடா நாட்டுக்கு செல்ல முடியாதுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக, அரசாங்கத்திடமிருந்து தலா 2 கோடி ரூபாய் பெற்றதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியிருத்தார். இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,

“அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய், நான் பெற்றதாக கூறினால் அதனை சிவசக்தி ஆனந்தன் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிதியை, நானோ, கட்சி தலைவர் இரா.சம்பந்தனோ பெறவில்லை. வேறு யாராவது பெற்றார்களா, இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஊடகவே நான் அரசியலுக்கு வந்ததாக சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு இல்லை. அக் கட்சியினர் தற்போது எனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அவர்கள் கடந்த காலங்களில் கொலைகள், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தனர். அதனாலேயே தற்போது வரை அதன் தலைவரும், செயலாளரும் கனடா நாட்டுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்கள் இதுவரை காலமும் எம்மோடு இணைந்து பணியாற்றியதால் அவர்களைப் பற்றி பேசாதிருந்தோம். தற்போது அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து பேச வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர்களின் கடந்த கால வரலாறுகளை மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இதனால் இனி அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இருந்தும் அவர்கள் தொடர்ந்தால் நாங்களும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

ad

ad