திங்கள், ஜனவரி 29, 2018

கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று அவசர கட்சித் தலைவர் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை 9 மணிக்கு நடத்தப்படவுள்ள இந்தக் கட்சித் தலைவர் மாநாட்டுக்கு, நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, மத்திய வங்கியின் பிணைமுறி விசார​ணை அறிக்கை தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. பிணைமுறி விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, அதன் உள்ளடக்கங்கள் பற்றி, பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் பிரதான விடயமாக, அறிக்கையின் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து பேசப்பட்டு வருகின்றது. இவ்வியடம் தொடர்பில், இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது, ஜனாதிபதியினால் விளக்கமளிக்கப்பட உள்ளதெனக் கூறப்படுகிறது.