www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், ஜனவரி 08, 2018

கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார் தயா மாஸ்டர்


விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இன்று யாழ்ப்பாண நகரில் கொலை முயற்சி ஒன்றில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள டான் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 
அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது
யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி ஆசிரியராக தயா மாஸ்டர் பணியாற்றி வருகின்றார். இன்று பிற்பகல் குறித்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர், அவரை கத்தியால் குத்த முயற்சித்த நிலையில் சக ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். கத்தி குத்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் தப்பிச்செல்ல முட்பட்ட போது, அவரை மடக்கிப்பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். அதேவேளை, கொலை முயற்சியில் உயிர் தப்பிய தயா மாஸ்டர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கு எதிராக குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தது.இதையடுத்து சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டவிரோத கேபிள் இணைப்பை நடத்துவோரால் குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.