மைட்ரோவிகா  பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.ஒலிவ மீது பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
கொசோவில் 1999ஆம் ஆண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 9 வருட சிறைத்தண்டனையை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் வழங்கியிருந்தனர். 
இருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.