புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

ஈழத்தை ஆதரிக்கிறதா சுதந்திரக் கட்சி? - நாமல் கேள்வி


யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில், விடுதலைப்புலிகளின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்
“யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. இதன் பொருள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனி ஈழத்தை ஆதரிப்பதா?” என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டரில் நாமல் கேட்டுள்ள இந்த கேள்விக்கு பலரும் தமது அபிப்பிராயங்களையும், எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தற்போது இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதேவேளை, தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களை ஒலிக்க விடுவது தேர்தல் விதிமுறை மீறல் மாத்திரமல்ல சட்டவிரோதமும் கூட என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ad

ad