புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’ -பாயும் வழக்குகள்! தொடரும் மிரட்டல்கள்!

மிழை ஆண்டாள் கட்டுரை சர்ச்சையாகிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்தும், விளக்கம் அளித்தும்கூட கவிஞர் வைரமுத்துவை விடமாட்டார்கள் போலும்! சட்டம் ஒருபுறம் தன் கடமையைச் செய்கிறது. இன்னொருபுறம், பக்தர்கள் என்ற பெயரில் மிரட்டல் விடுத்த வண்ணம் இருக்கிறது ஒரு கூட்டம்.  

ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் மூன்றுk பிரிவுகளின் கீழ் வைரமுத்து மீது ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. சென்னையில், கொளத்தூரிலும், சிந்தாதிரிப்பேட்டையிலும் மேலும் இரண்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 

‘வைரமுத்து எழுதிய எழுத்துக்கும், பேசிய பேச்சுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?’ என்று அவர் மீதான வழக்கில் போடப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் குறித்து வலைத்தளங்களில் ஆளாளுக்கு பதிவுகள் போட்டிருக்கின்றனர்.


பிரிவு 153-A பிரகாரம், உள்நோக்கத்துடன் தனது பேச்சாலோ, எழுத்தாலோ, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே பகையை மூட்டியது அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 


பிரிவு 295 A பிரகாரம், தனது பேச்சாலோ, எழுத்தாலோ, இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபணமானால், 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

பிரிவு 505 (1) பிரகாரம், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கட்டுரையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 


சட்டரீதியாக, வைரமுத்துவுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என்றெண்ணியோ என்னவோ, சிலர் போராட்டங்கள் நடத்தியவண்ணம் உள்ளனர். ஒரு கூட்டம் வீதியில் இறங்கிப் போராடுகிறது என்றால், இன்னொரு கூட்டம் வலைத்தளங்களில், பழைய விவகாரங்களை தூசு தட்டி பதிவு செய்கிறது. இத்தைகைய பதிவுகளில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், அறிஞர் அண்ணா, கி.வீரமணி, தாமரைக்கனி போன்றவர்கள் குறித்த விஷயங்கள் உள்ளன. ‘இன்றைக்கு முத்துராமலிங்கத் தேவர் உயிரோடு இல்லை. தாமரைக்கனியும் மறைந்துவிட்டார். அந்தக் காலத்திலும் மதுரை மீனாட்சி குறித்தும், இதே ஆண்டாள் குறித்தும் கீழ்த்தரமாகப் பேசினார்கள். அதற்கு கடவுள் நம்பிக்கையாளர்கள் தந்த பதிலடி கடுமையானது. தெய்வங்களை அவதூறாகப் பேசியவர்களுக்கு,  தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதபடி பாடம் கற்பித்தனர். வைரமுத்துவுக்கும் இது நடந்தே தீரும்.’ என்கிற ரீதியில், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அந்தப் பதிவுகள் உள்ளன. 20-7-1982-இல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே,  தாமரைக்கனி ஆட்கள் கி.வீரமணியைத் தாக்கிய விவகாரத்தில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள். 


மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள் எச்.ராஜாவின் வன்முறைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாலும்,  கலக்கத்திலேயே இருக்கிறார்  வைரமுத்து.    ‘தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிகமிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. தேவரடியார் அல்லது தேவதாசி என்பது திருப்பெயர்களே ஆகும். என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.’ என்று  உருக்கத்துடன் விளக்கம் அளிக்கிறார்.  

‘ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான். என்னைப் புரிந்துகொள்ளுங்கள்.’ என்று இவ்வளவு தூரம் வைரமுத்து இறங்கிவந்து வருத்தம் தெரிவித்த நிலையிலும், ‘விட்டேனா பார்!’ என்று கலகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது?

ad

ad