03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஜனவரி 30, 2018

திருடர்களை சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்ள முடியாது! - மைத்திரி பல்டி

திருடர்களை பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால்
உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு, தூய்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்து கொள்ள முடியாதென ஜனாதிபதி தெரிவித்தார்.
திருடர்களை பாதுகாப்பதற்காகவும் திருடர்களை விடுவிப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக்கு, தூய்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒருபோதும் ஒரே மேடையில் இணைந்து கொள்ள முடியாதென ஜனாதிபதி தெரிவித்தார்.

சிலரால் தமது அரசியல் கொள்கைகளுடன் இணைந்து கொள்ள முடியாதென்பதை அறியாது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரையும் தம்முடன் ஒரே அணியில் அணிதிரளுமாறு தாம் அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தமது குறிக்கோள்களை நிறைவேற்ற எவரும் எவ்வகையில் செயற்பட்ட போதிலும் நாட்டிற்கு தேவையான தூய்மையான அரசியல் பயணத்தினை எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தான் வெற்றிகொள்வேன் வலியுறுத்திய ஜனாதிபதி, திருடர்கள் அற்ற, திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடாத, அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தூய்மையான தேசத்தை கட்டியெழுப்பி முன்னோக்கி செல்ல தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்விடைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு தற்போது கட்சி வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் மோசடிகளற்ற தூய்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கும் நாட்டை நேசிக்கும் சகல மக்களும் தம்முடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது சட்டமான அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊழல், மோசடிக் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சட்டம் அங்கீகரிக்கப்பட்டு தற்போது 23 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இவ்வளவு காலமும் குறித்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நான்கு பேரே குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள இடமளிக்காமையும் விசேடமாக கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளுமே அதற்கு காரணமென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடிகளை நாட்டிலிருந்து இல்லாதொழிக்காமல் நாட்டிற்கு எதிர்காலம் ஒன்று இல்லை எனவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி, நிறம், இனம், மதம், சாதி வேறுபாடுகளை கருத்திற்கொள்ளாது சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவை காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினா