புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!



முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போ

னார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், மோசடி குறித்து கோவை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாலமுருகனின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி (21), தாய் சித்ரா (45), சகோதரர் பிரசன்ன (38) வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் இளம்பெண் ஸ்ருதி முகநூல், மேட்ரிமோனி மூலம் ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து பணம் பரித்தது தெரியவந்துள்ளது. 

ad

ad