புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2018

யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடலை ஒலிக்கவிட்டு வாக்குப் பிச்சை கேட்கும் சுதந்திரக்கட்சி

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளை யார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.

நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும் “ அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா.... அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா.... இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா....” போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் ஜனாதிபதியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வேட்டையாடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பில் வாக்குக் கேட்கும் நிலைக்கு வந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

ad

ad