புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2018

பாடசாலை மீது போராளிகள் தாக்குதல்: - 100கும் மேற்பட்ட மாணவிகள் மாயம்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியில் போராளிகளால் தாக்குதல் நடத்திய பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் அன்று பள்ளியின் மீது மறைந்திருந்தவாறு தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே 50-க்கும் மேற்பட்ட மாணவிகளை காணவில்லை, இருப்பினும் மாணவிகள் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டார்களா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை என நைஜீரிய அரசு அதிகாரி ஒருவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நைஜீரியாவின் அரசாங்கமும் காணாமற் போனவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை, ஆனால் அரசு தரப்பினர் தொடர்ந்து முரணான தகவல்களை அளித்துவருகின்றனர். பஷீர் மான்ஸோ என்ற தந்தை காணாமல் போன மாணவிகளில் எனது மகள் பாத்திமாவும் ஒருவர் என செய்தியாளர்காளிடம் கூறியுள்ளார். காணாமல் போன மாணவிகளின் சரியான எண்ணிக்கையை இதுவரை யாரும் வெளியிடவில்லை, ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை காணவில்லை என்று பஷீர் தெரிவித்தார்.

நைஜீரிய ஜனாதிபதி முகம்மது புஹரி காணாமற்போன பெண்களை விரைவில் கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவர், தாக்குதல் நடத்திய போராளிகளும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர். இந்த சம்பவம் ஒரு "தேசிய பேரழிவு" என்று சமூக வளைத்தளம் மூலம் தெரிவித்துள்ளர்அ திகளவு துருப்புக்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு காணாமற்போன மாணவர்களை தேடும்பணி முழுவீச்சில் நடைபெறுவதாக முகம்மது புஹரி மேலும் தெரிவித்தார் Boko Haram என்று அழைக்கப்படும் நைஜீரிய போராளிகள் ஏப்ரல் 2014ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட 300 பெண்களை நைஜீரியாவில் கடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad