புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

சென்னையில் பரபரப்பு! - நள்ளிரவில் 72 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது! போலீசார் அதிரடி!



சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 72 ரவுடிகளை, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

சென்னை பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்க இருப்பதாகவும், இந்த விழாவில் பங்கேற்க சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளும் ஒரே இடத்தில் குவிய உள்ளனர் என்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, 60க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். பின்னர் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரே இடத்தில் 120க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்டறிந்தனர். பண்ணை வீட்டில் அதிரடியாக போலீசார் நுழைந்ததைக் கண்டு 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆயினும், 72 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர்.

பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் வருவதை அறிந்ததும் முக்கிய ரவுடியான பினு அங்கிருந்து தப்பியுள்ளான். போலீசார் நடத்திய இந்த வேட்டையில் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளிகளும், தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளும் சிக்கியுள்ளனர். சிக்கிய ரவுடிகளிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வேறு ஏதேனும் நோக்கத்தில் ஒன்றுகூடியிருந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

திரைப்பட பாணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒரே இடத்தில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தது என நிகழ்ந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

ad

ad