புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

இந்த அரசை நல்லாட்சியென நான் ஒருபோதும் கூறியதில்லை ; மாவை சேனாதிராஜா

சிறையில் இருக்கின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது முயற்சிகள் தொடர்ந்தும்
இடம் பெற்று வருகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன் கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…..
வரவிருக்கின்ற அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு, மாகாணத்திற்கு அதிகாரம் பகிரப்படும். அதேபோன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகமான அதிகாரங்கள் பகிரப்படவுள்ளன.
எங்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால் எங்கள் இளைஞர்கள், பெண்கள் இந்தப் போரில் ஆயுதம் ஏந்தி, தங்களது உயிர்களை இழந்த எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இந்தப் போர்க்குற்றம் மகிந்த மீது சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் வந்த பொழுது 2011 ஆம் ஆண்டு உலக நாடு டு கள் அந்த போர்க்குற்றப் பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக இருந்தன.
தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளதால் நான் அவர்களை நல்லாட்சி என்று வர்ணித்தது கிடையாது. ஐ.நா. சபையில் தற்போதைய ஆட்சிக்கு பிறகு கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இராணுவத்தினரிடம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், அந்த இடத்தில் மக்கள் மீள குடியேற்றப்பட வேண்டும், கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் நீக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது,
பயங்கர வாதத் தடுப்புச்சட்டம் பயங்கரவாதிகளை உருவாக்குகின்ற சட்டம், இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சர்வதேசத்தோடும் அரசாங்கத் தோடும் நாங்கள் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.
சிறையில் இருந்தவர்கள் கணிசமான ராக் வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அவர்களும் தொடர்ந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எங்களது முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார்.

ad

ad