புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2018

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம்

நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர், அதனைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, தேர்தலை நடத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள டிலான் பெரேரா, “நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியாது என்பதை, மகிந்த ராஜபக்ச தனது சட்ட அறிவின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் 70(1) பிரிவின் கீழ், சிறிலங்கா அதிபர், நான் ஆண்டுகள், ஆறு மாதங்கள் நிறைவடைந்த பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் அதற்கான கோரிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன-

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன,

“நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்படாமல், சிறிலங்கா அதிபரால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாடாளுமன்றம் 5 ஆண்டு பதவிக்காலத்துக்காகவே தெரிவு செய்யப்படுகிறது.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலில் இழப்பைச் சந்தித்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற மரபோ அல்லது கடப்பாடோ கிடையாது. இது ஒரு செல்லுபடியாகக் கூடிய கோரிக்கையல்ல.” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ‘ மகிந்த ராஜபக்ச ஆதரவு குழு 4.9 மில்லியன் வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கிறது. ஆனால்,ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜேவிபி, மனோ கணேசனின் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன தனித்தனியாகப் போட்டியிட்டு, 6.1 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகள் அனைத்தும், 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பரப்புரை செய்தன. எனவே, பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் உரிமை கோரலில் உண்மையில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad