புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.

ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிறிலங்கா திரும்பவுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகள் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அரசுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவது சந்தேகமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad