புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ; சிறீதரன்

நாங்கள் தமிழ் மக்களின் நன்மைக்காக போராடும் ஒரு எதிர்க்கட்சி ;
உள்ளூராட்சித்தேர்தலில் நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருப்பதன் மூலம் தான் எங்களது உரிமைகள் பற்றி பேசமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளை பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,நாங்கள் இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகிக்கவில்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற அவர்களது உரிமைகள் பற்றிப்பேசுகின்ற ஒரு எதிர்க்கட்சியாகவே இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்திடம் எமது மக்களின் உரிமைகளுக்காக அறுபது தடவைகளுக்கு மேல் பேசியிருக்கின்றோம், இப்போது தேர்தலில் போட்டியிடுகின்ற பல கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாக ஏற்றுக்கொண்டு விட்டது என்று போலியாக பரப்புரையாகச் செய்கின்றனர்.

இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாகக் கூட இன்னும் கொண்டு வரவில்லை. அதில் உள்ள விடயங்களைப் பேசுகின்றோம்,

அது முன்னேற்றம் காணப்பட்டு அதில் இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் இறுதி அறிக்கை தொடர்பில் மக்களிடம் பேசப்படும்.பின்னர், நாடாளுமன்றத்தில் கொண்டு சென்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பின்னர் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும்,

இதையெல்லாம் விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாக ஏற்று விட்டதென்று போலிப்பிரச்சாரம் செய்கின்றார்கள், நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரு அமைப்பு.இதிலிருந்து நாங்கள் விலகிப்போகமாட்டோம் இது ஒரு உள்ளூராட்சித்தேர்தல் இதில் நாங்கள் பலமான ஒரு பேரம்பேசும் ஒரு சக்தியாக இருக்கவேண்டும்.

அதற்கான ஆணையை மக்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள் இன்றும் தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னமும் அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad