புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2018

நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகும் கூட்டத்தொடர் இலங்கைக்குப் பெரும் சவால்! -ரம்புக்வெல

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத்­திற்கு அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அர­சாங்­கத்­திடம் எவ்­வித அனு­மதி­யும்­பெற்றுக் கொள்­ளாது இணை­ய­னு­ச­ரணை வழங்­கி­யதன் விளை­வினை நாளை ஆரம்­ப­மாக உள்ள ஐ.நா. மனித உரி­மையின் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை எதிர்­கொள்ளும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத்­திற்கு அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அர­சாங்­கத்­திடம் எவ்­வித அனு­மதி­யும்­பெற்றுக் கொள்­ளாது இணை­ய­னு­ச­ரணை வழங்­கி­யதன் விளை­வினை நாளை ஆரம்­ப­மாக உள்ள ஐ.நா. மனித உரி­மையின் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை எதிர்­கொள்ளும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

இலங்­கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்பில் ஐ. நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் அல் ஹுசைன் விடுத்­துள்ள அதி­ருப்தி தொடர்பில் தெளி­வு­ப­டுத்­திய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் ,

மனித உரி­மைகள் ஆணை­யாளர் கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக இலங்­கைக்கு எதி­ரா­கவே தனது பாரிய அழுத்­தங்கள் மற்றும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­வது ஏற்றுக் கொள்ள முடி­யாது . குறித்த விட­யத்­தில் நல்­லாட்சி அர­சாங்­கமே முழுப் பொறுப்­பினை யும் ஏற்று இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை பொய்­யென்று ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க வேண்டும்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37ஆவது கூட்­டத்­தொடர் நாளை ஆரம்­ப­மாக உள்­ளது.உல­க­ளா­விய ரீதியில் இடம் பெறும் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 4பரிந்­து­ரைகள் மிக முக்­கி­ய­மா­ன­தாக ஐ.நா வை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாடு­களின் பார்­வையில் காணப்­ப­டு­கின்­றன. 2009ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதி யுத்­தத்தின் பொழுது இலங்கை இரா­ணுவத்­தினர் போர்­க்குற்­றங்கள் மேற்­கொண்­டார்கள் என பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. குறித்த குற்­றங்கள் உண்மை என்று நிரூ­பிக்கும் முக­மாக முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி தன்­னிச்­சை­யாக தமது அனு­ச­ர­ணை­யினை வழங்­கி­யதன் தாக்­கத்­தினை ஐ.நா. சபையில் இலங்கை எதிர்­கொண்டு வரு­கின்­றது. நாளை இடம் பெறும் கூட்டத் தொடர் இலங்­கைக்கு பாரிய சவால்­களை உரு­வாக்­கு­வ­தாக காணப்­ப­டு­கின்­றது.

ad

ad