புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2018

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கலந்து கொள்­ள­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­ன­ரான இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­ப­தில்லை.

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இடம்­பெற்ற இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­றது. கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் 2015ஆம் ஆண்டு மற்­றும் 2016ஆம் ஆண்­டு­க­ளில் இடம்­பெற்ற இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றி­ருந்­தார்­கள்.

கடந்த ஆண்டு இடம்­பெற்ற இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் மாத்­தி­ரம் பங்­கேற்­றி­ருந்­தார். எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் திரு­கோ­ண­ம­லை­யில் கோயில் நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்­த­மை­யால் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

நேற்று இடம்­பெற்ற இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில், எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் இரு­வ­ரும் பங்­கேற்­க­வில்லை.

தேர்­தல் பரப்­புரை கார­ண­மா­கவே இதில் பங்­கேற்­க­வில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அறி­வித்­தி­ருந்­தா­லும், கூட்­ட­மைப்­பின் இந்த நட­வ­டிக்கை அவ­தா­னிக்­தக்க செயற்­பாடு என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்

ad

ad