புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2018

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு!

கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள் ஆகியோரை நியமித்துள்ளது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் கைப்பற்றிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவிசாளர்கள் மற்றும் உபதவிசாளர்கள் ஆகியோரை நியமித்துள்ளது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் கைப்பற்றிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில், மூன்று சபைகளுக்குமான தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கரைச்சிப் பிரதேச சபையினுடைய தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக சின்னையா தவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளராக சிவகுமாரன் சிறிரஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக அருணாசலம் ஐயம்பிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக முத்துக்குமார் கஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad