புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2018

காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு

இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல்
போன உறவுகள் தொடர்பாக கருத்து கூறுவதற்கு எவ்வித அதிகாரமும் அவருக்கு இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச சபை,வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான செல்வி பத்திநாதன் சர்மிளாவை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை(6) மாலை தேவன் பிட்டி மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,
காணாமல் போனவர்கள் தொடர்பில் கருத்து கூறும் அதிகாரம் காணாமல் போனவர்கள் தொடர்பில் கூற்றைச் சொல்லுகின்றவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை நடை முறைப்படுத்தி வெளி நாட்டு நீதிபதிகளைக்கொண்டு அந்த நீதிபதிகள் கூறுகின்ற தீர்ப்பின் ஊடாகத்தான எங்களுடைய காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு செய்தி சொல்லப்பட வேண்டும்.
ஜனாதிபதி எந்த அதிகாரத்தையும் கொண்டும் இதற்கான பதிலை கூற முடியாது. உங்களுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் கூறும் அதிகாரம் இல்லை என்பதனை வெளிப்படையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் காட்டிக்கொடுத்து விட்டனர் என்கின்றார்கள்.
எதனைக்காட்டிக்கொடுத்து விட்டோம்?எங்களுடைய சமூகத்தை கட்டிக்கொடுத்து விட்டோமா? இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம் என தெரிவிக்கின்றார்கள். இடைக்கால அறிக்கை இன்னும் வாக்கெடுப்பிற்கு வரவில்லை.விவாதத்திற்குத்தான் வந்துள்ளது. இடைக்கால அறிக்கை என்பது தெட்டத்தெழிவாக தெரிகின்றது. விடுதலைப்புலிகள் தமது ராஜதந்திர நகர்வாக எல்லா அரச தலைவர்களுடனும் பேசினார்கள்.
உச்ச கட்ட வெற்றியை ஈட்டிக்கொண்டு அவர்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசினார்கள்,சந்திரிக்காவுடன் பேசினார்கள்,ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினார்கள். ஒவ்வெறு தலைவர்களுடனும் பேசும் போது நாங்கள் நினைத்தோம் அவர்கள் பலவீனமாக இருக்கின்றார்கள் என்று. ஆகவே ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த போர் நிறுத்தம் என்று நினைக்கின்ற வாய்ப்புத்தான் சாதாரண மக்களிடம் இருந்தது. ஆனால் அப்படி இல்லை.சர்வதேசத்திடம் அவர்கள் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
ஆயுதப்போராட்டம் எதற்காக நியாயப்படுத்தப்படுகின்ற வகையிலே ஆயுதப்போராட்டம் நியாயமான வகையிலே எங்களுடைய மக்களின் விடுதலைக்கு ஆயுதப்போராட்டம் தான் இன்றி அமையாததொன்று என்று சொல்லுகின்ற வகையிலே தென்னிலங்கை எங்களை ஏமாற்றுகின்ற வகையிலே நாங்கள் இந்த ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம், வெற்றி பெற்றிருக்கின்றோம்.
எதிரியை நாங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் என்று சொல்லுகின்ற நியாயப்பாட்டை சொல்லுவதக்காகவே இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

ad

ad