புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2018

வடக்கில் வைத்தியா்களாக பட்டம் பெறும் தமிழ் மாணவா்கள் எங்கு செல்கிறாா்கள்!

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ பீடங்களிலிருந்து வைத்திய கலாநிதிகளாக
வெளிவந்து கொண்டிருக்கின்ற போதும் இன்னும் வைத்தியர்களின் பற்றாக்குறை வட மாகாணத்தில் தொடர்ந்து கொண்டேயிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தாா்.



இன்றையதினம்(23-02-2018) யாழ்ப்பாணம் குருநகர் பிரதேச வைத்தியசாலை கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றுப்போது இவ்வாறு தெரிவித்தாா்.



இவ்வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களை கவனிப்பதற்காக இரண்டு நிரந்தர வைத்தியர்கள் உட்பட 15ற்கு மேற்பட்ட அனைத்துத்தர உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டது. இது ஒரு ஆரோக்கியமான விடயம்.



ஆனால் நேற்றைய தினம் புளியங்குளம் பகுதியில் இதே போன்று, புனரமைப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காகச் சென்றிருந்தேன்.



அங்கு ஒரேயொரு வைத்தியர் மட்டும் முழுக்கடமைகளையும் ஆற்றவேண்டிய கட்டாய தேவை அவதானிக்கப்பட்டது.



ஒரு சிங்களப் பெண் வைத்தியர் சென்ற நான்கு வருடங்களாக அங்கு தொடர்ந்து தன்னந்தனியராய் சேவையாற்றுகின்றார். என்று குறிப்பிட்டாா்.

ad

ad