புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2018

ஜனாதிபதி மைத்திரிக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதி​ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை முறைப்பாடு செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் இலங்கைப் பிரஜை அல்லாத நபர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக தெரிவு செய்தமை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற ரீதியில் குறித்த அமைச்சில் நடைபெறும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாகவே ஜனாதிபதிக்கு எதிராக முறைபாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad