புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் ? பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா?

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா? என்றெல்லாம் பேசப்படுகின்றது. இவை ஒரு புறம் இருக்க தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைக்கான போராட்டத்தை வெற்றி கொள்ளும் வகையில் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இதனைவிடுத்து தமிழ் அரசியல் தலைமைகள் ஒருவரை ஒருவர் குற்றம் கண்டு குறை கூறுவதால் நாம் நலிவடைந்தே செல்ல வேண்டிய பேரபாயம் உள்ளது.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
திருக்கோவில் காயத்திரி கிராமத்திலுள்ள மக்களைச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பல இடங்களில் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ் மக்கள் பல சபைகளை தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இத்தருணத்தில் நாம் விட்ட தவறு என்ன என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறா வண்ணம் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் அணிதிரள வேண்டியது அவசியமாகும்.
மதுபானப் போத்தல்களுக்கும் இன்னும்பல பொருட்களுக்கும் எமது வாக்குரிமையை விற்றுவிட்டால் அது எதிர்காலத்தில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கிவிடும். இதனை இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் எமது கைவிரல்களைக் கொண்டு எமது கண்களைக் குத்தி குருடாக்கிய நிலையை காட்டி நிற்கும். இன்று நாம் விடுகின்ற தவறு எமது எதிர்காலச் சந்ததியினரை இந்த மண்ணில் நிம்மதியாக வாழ விடாது என்பதை உணர்ந்து நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் அதிலும் குறிப்பாக கல்முனைப் பிரதேச தமிழ் மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் தமது தமிழ் உணர்வையும் தணியாத தாகத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஆகவே எமது மக்கள் ஒரு கயிற்று நாராக இருக்க வேண்டும் என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ad

ad