புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2018

தமிழ்க் கூட்­ட­மைப்பு சோரம் போக­வில்லை!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பார­தூ­ர­மான குற்­றச் சாட்டு.
அதனை ஏற்­றுக்­கொள்­ளப் போவ­தில்லை.
இவ்­வாறு தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல்­கள் மற்­றும் அரச கரு­ம­மொ­ழி­கள் அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார்.
தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் தெரி­வித்­தா­வது-,
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சி­டம் சோரம் போய்­விட்­டது என்று கூறப்­ப­டு­வது பிழை­யான விட­யம். ஆனால், தன்­னால் இயன்­றதை கூட்­ட­மைப்பு சரி­யாக செய்­கின்­றதா என்­பது பற்றி மாறு­பட்ட கருத்­துக்­கள் இருக்­க­லாம்.
சோரம் போனது என்­பதை ஏற்க முடி­யாது. அர­சின் ஆக்­கத்­துக்கு நாம் எவ்­வாறு உள்­ளி­ருந்து பங்­க­ளிப்பு செய்­கின்­றோமோ, அதே­போன்று கூட்­ட­மைப்பு வெளி­யி­லி­ருந்து பங்­க­ளிப்பு செய்­து­வ­ரு­கி­றது – என்­றார்.

ad

ad