புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2018

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நடந்த கூட்டத்திலேயே, கூட்டமைப்பு சார்பில் ஜெனிவாவுக்கு 5 பேர் கொண்ட குழுவை அனுப்புவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கு செல்லும் குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்கனவே ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார். மேலும் நான்கு உறுப்பினர்கள் விரைவில் அவருடன் சென்று இணைந்து கொள்வார்கள்.

இவர்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குழு அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றுவார்கள்” என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ad

ad