புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2018

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே நிற்கமாட்டோம்! - ஹக்கீம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப்- ஹக்கீம் தெரி வித்தார். 'சிலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கெதிராகவும், தலைமைக் கெதிராவும் கட்டுக் கதைகளையும்,விஷம பேச்சுகளையும் சொல்லித் திரிகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்றும் கூறி வருகின்றனர்.

இன்றைக்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் 1948 ஆண்டு தந்தை செல்வா தமிழரசு கட்சியை ஆரம்பித்து விட்டு வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பித்து வைக்கப் பட்டு இன்று 70 வருடங்கள் கடந்து விட்டது. இன்றைக்கு 70 வருடமாக போராடிக் கொண்டிருக்கின்ற இந்தப் போராட்டத்தின் வடிவம் இன்று எந்த சாத்தியப் பாட்டில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது.

தற்போது பிரிந்து கிடக்கின்ற வட கிழக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் , அதன் தலைமை களும் மீண்டும் இணைக்கக் கோருகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது . மிகவும் தெளிவாக இரா சம்பந்தன் ஐயாவே சொல்லுகிறார். முஸ்லிம்களை கேட்காமல் வடக்கு கிழக்கை இணைக்க மாட்டேன் என்பதை. இப்போது அவர்களுடன் எதிர்த்து பேசி அவர்களுடைய அபிலாஷைகளுக்கு குறுக்கே நின்று என்ற தேவை எங்களுக்கு ஏன் இருக்கின்றது.

என்னைப் பொறுத்த மட்டிலே வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான அதிகார அலகு எங்களுக்கென்று தனியான அரசியல் நிருவாகம் என்ற விடயங்களில் நேர்மையாக கவனமாக எங்களுடைய விடயங்களை பேசி வருகின்றோம். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்திலே நாங்கள் காட்டமான நிலைப்பாட்டை இன்னும் எடுக்காமல் இருக்கின்றோம். எங்களுக்கு ஒரு தனித்துவமான கொள்கை இருக்கிறது. அந்த கொள்கை வேறொரு சமூகத்தின் அபிலாஷைகளில் மண்ணை அள்ளிப் போடுகின்ற கொள்கையாக அதை பார்க்க வேண்டிய அவசியமில்லை.

இன்றைக்கு அரசியல் யாப்பு மிகவும் தெளிவாகச் சொல்கிறது. இரண்டு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றால் அந்த மாகாணங்களிலே மக்கள் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி தனது அங்கிகாரத்தை கொடுக்க வேண்டும். அது மாத்திரமில்லை பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற வேண்டும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ad

ad