புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

யாழ். மாநகர மேயர் பதவி - கூட்டமைப்புக்குள் இழுபறி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள யாழ். மாநகரசபையில், மேயர் பதவி தொடர்பாக
இழுபறி நிலை தோன்றியுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் வேட்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் நிறுத்தப்படுவதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் முன்னர் அறிவித்திருந்தார். எனினும் அவ்வாறு யாரையும் நிறுத்தவில்லை என்று மாவை சேனாதிராசா நிராகரித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள யாழ். மாநகரசபையில், மேயர் பதவி தொடர்பாக இழுபறி நிலை தோன்றியுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் வேட்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் நிறுத்தப்படுவதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் முன்னர் அறிவித்திருந்தார். எனினும் அவ்வாறு யாரையும் நிறுத்தவில்லை என்று மாவை சேனாதிராசா நிராகரித்திருந்தார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மாநகரசபைக்கான மேயர் தெரிவு தொடர்பான விவகாரம் கட்சிக்குள் சூடு பிடித்துள்ளது. யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட்டை தெரிவு செய்ய வேண்டாம் என கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் எடுத்து கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்னோல்ட்டை யாழ். மேயர் வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உடன்பாடில்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சொலமன் சூ சிறிலை நியமிக்க வேண்டுமென்ற கருத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பிறகட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைமைகள் ஆகியோரிடம் காணப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படலாம் என கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட தலைவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad