தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, பிப்ரவரி 10, 2018

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அமோக வெற்றியிட்டியுள்ளனர்.
அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில்  வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம்
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.