புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2018

காணாமல்போனோர் எங்கேயும் இல்லை; கைவிரித்தார் மைத்திரி

போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் காணாமல் போன உறவினர்கள் சந்தேகிப்பது போல
அவர்களது உறவுகள் எவரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் முகாம்களிலோ அல்லது பொலிஸ் சிறைச்சாலைகளிலோ இல்லை என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டதாக தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவத்தினரது முகாம்களில் அல்லது சிறைக்கூடங்களில் தங்களது உறவுகள் இருப்பதாக சந்தேகிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பல தடவைகளிலும் தெரிவித்திருந்தனர்.
எனினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்ற இடங்களில் அவர்களுடன் தானும் சென்று பார்ப்பதற்கு தயாராகவே இருப்பதாக இறுதியாக இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பகல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகிப்பது பிழை என்று தெளிவாக கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “இராணுவ முகாம்களில், பொலிஸ் சிறைகளில் மற்றும் காடுகளில் காணாமல் போனவர்கள் ஒழித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே அரசாங்கம் என்ற வகையில் அதுகுறித்து தெளிவாக தேடிப்பார்த்தேன். எனினும் காணாமல் போனவர்களில் எவரும் எந்த முகாமிலோ, காடுகளிலோ ஒழித்துவைக்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம். காணாமல் போனமை பிரச்சினை வடக்கில் மட்டுமல்ல, தென்னிலங்கையிலும்கூட யுத்தகாலத்தில் பலரும் காணாமல் போயிருக்கிறார்கள். என்னிடத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

ad

ad