புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2018

தலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்! - கயிற்றில் நடந்த போது விழுந்தார்

தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை
நடத்தப்படும்வரை அதிபர் தலைமைத்துவப் பயிற்சிகளை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். இவர் கயிற்றில் நடந்த போது, 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணமானார்.
தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்வரை அதிபர் தலைமைத்துவப் பயிற்சிகளை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். இவர் கயிற்றில் நடந்த போது, 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணமானார்.

அம்பாந்தோட்டையிலுள்ள தேசிய பாடசாலையின் பெண் அதிபர் இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சியின்போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேநேரம் இந்த விசாரணை முழுமையடையும் வரை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை இடைநிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

குருணாகலை வாரியபொலவில் இடம்பெற்ற வடமேல் மாகாணத்துக்கான தலைமைத்துவப் பயிற்சியின்போது திடீர் விபத்துக்குள்ளான மேற்படி தேசிய பாடசாலையின் பெண் அதிபர், வைத்தியசாலையில் கொண்டு சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

அதிபர்களின் ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது. இதனால் அதிபர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் அதிபர் ஆரம்பம் முதலே பணிப்புரை விடுத்து வந்தார். இந்நிலையிலும் துரதிஷ்டவசமாக அதிபர் உயிரிழந்துள்ளதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழுமையான விசாரணை நடத்துமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்துள்ள அதிபரான ரோஹினி அத்தபத்து ஏற்கனவே கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படடுள்ள இரண்டு தலைமைத்துவப் பயிற்சிகளில் பங்குபற்றியதுடன் சாரணர் பிரிவுக்கான தலைமைத்துவ அதிகாரியாக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad