புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2018

விலகும் முடிவை மாற்றியது சுதந்திரக் கட்சி! - தொடரப் போகும் கூட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கத்தை விட்டும் விலகபோவதில்லை என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கத்தை விட்டு விலகிப் போகாது தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருப்பதாகவும், அதே ​நேரம் அரசாங்கத்தின் பலமிக்க தரப்பாக தாம் செயற்படப் போவதாகவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அதே ​போன்று ஜனாதிபதிக்குத் தேவையான வகையில் அமைச்சரவையில் மாற்றமொன்றை மேற்கொள்ளவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, கூட்டு அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி தற்காலிகமாக தணியத் தொடங்கியுள்ளது

ad

ad