புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2018

ஆசிரமத்தில் சேரும் பெண்களிடம் ஆபாச ஒப்பந்தம்



நித்தியானந்தாவின்  கூத்துகள் அம்பலமாகி அவ்வப்போது அவரின் முகத்திரை கழற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
நீதிமன்றங்களும் அவரை கடுமையாக கண்டிக்கின்றன. சமீபத்தில் கூட நித்யானந்தாவின் சீடர்கள் நீதிமன்றத்தில் புகைப்படம் எடுத்து நீதிபதியின் கண்டனத்திற்கு ஆளானார்கள். மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவின் ஆசிரமங்களை இழுத்துமூடும் சூழல் ஏற்படும் என சென்னை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. வைரமுத்து ஆண்டாளுக்கு எதிராக எழுதிய கட்டுரையை திசை திருப்பி நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் அவருக்கு எதிராக ஆபாசமாக பேசி வெளிட்ட வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை பார்த்த ஆன்மிகவாதிகளும் கூட  நித்தியானந்தா  ஆசிரமம்தான்  நடத்துகிறாரா இல்லை வேறு மாதிரியான விடுதி நடத்துகிறாரா என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் நித்யானந்தாவின் ஆசிரமம் குறித்து ஆதாரத்துடன் திடுக்கிடும் தகவல்களை நக்கீரனுக்கு அளித்தார்.

வடஇந்திய போலிச் சாமியார்  ராம் ரஹீமுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வந்தவுடன்  நித்தியானந்தா குறித்து நான் போட்ட ஒரு ஃபேஸ்புக்   பதிவு  கொஞ்சம் வைரலாகுது. அந்த பதிவு வைரலான உடனே 150 சீடர்கள் ஒரே பாணியில்   திட்டிட்டுருக்காங்க, போஸ்ட் போடுறாங்க. நான் உடனே "சைபர் கிரைம்ல" புகார் கொடுக்குகிறேன். அவர்கள் என் மீது புகார் கொடுக்கிறார்கள். நான் போட்ட பதிவில்  நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில் நித்தியானந்தா ஒரு பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்' (rape accused)  அதை குறிப்பிட்டுதான் சொன்னேன். பாலியல் ஒப்பந்தம் போட்ட பின்புதான் அவர்களை உள்ளே வர அனுமதிக்கின்றனர். இதில் மைனர் பெண்களும் உள்ளனர், மைனர் ஆண்களும் உள்ளனர். இந்த ஒப்பந்தம் ஆவணப்படுத்தபடுகிறது. இந்தப் பதிவுக்கு அதிகமான எதிர்ப்பு வந்தது.

ஆண்டாள்  பிரச்சனையில் வைரமுத்துவுக்கு எதிரா நித்தியானந்தா சீடர்கள் இறங்கக் காரணம், இவருடைய வழக்கு  உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ராமநகரா நீதிமன்றத்தில் பிப்ரவரி முதல் விசாரிக்கப்பட இருக்கிறது.  இப்ப பா.ஜ.க.வுடைய ஆதரவு இவுங்களுக்கு அதிகமாக தேவைப்படுது. அதனாலதான் எதிர்ப்பை அதிகமா காட்றாங்க. இதுக்கு ஒரு ஆதாரமாக ஒரு நிகழ்வு என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலேயே  நிகழ்ந்தது. நான் போட்ட ஒரு பதிவுக்கு திருப்பூரிலிருந்து பா.ஜ.க வைச்  சேர்ந்த  ஒருவன், அப்புறம் துணை தலைவர் ஒருவன் நித்தியானந்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாங்க. இவங்க இருவரும் மாறி, மாறி (பா .ஜ .க வும் , நித்தியானந்தாவும்)  முதுகை சொரிந்து கொள்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்து தீவிரவாதம் எல்லாம் முழுமையாக வரவில்லை. இந்த ஆளு அந்த இடத்தை நிரப்பப்  பார்க்கிறார். அதனால்தான் பா.ஜ.கவிற்கு சாதகமான நிலையயை பின்பற்றுகிறார். 

இதில் முக்கிய காரணம் ஒரு ஆசிரமம் நடத்தவேண்டுமென்றால் விதிமுறைகள் இருக்கு. "ஜூலியன் ஜஸ்டிஸ்" என்ற சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறையை பின்பற்றவேண்டும். பாஸ்கோ சட்டம் மிக தெளிவாக சொல்கிறது எந்த ஒரு மைனர் குழந்தையும் பாலியல் ரீதியான வார்த்தைகள், படங்கள், புகைப்படங்கள் அதைப்பற்றி பேசவே கூடாது என்று. மத கல்வி நிறுவன சட்டம் 1988ன் கீழ் என்ன சொல்கிறது என்றால் அடுத்த மதத்தின் மீதான வெறுப்பை வரவிடக்கூடாது என்று. இவங்க என்ன பன்றாங்க முஸ்லிம இப்படி பேசிடுவீங்களா, பண்ணிடுவீங்களா என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். இதற்கு தமிழக அரசு ஏன்? மௌன விரதம் இருக்கு என்று தெரியவில்லை. நாங்கள் பாஸ்கோ சட்டத்தின் கீழ் மதத்தை தவறாக உபயோகிக்கிறார்கள் என்று வழக்கு போட்டாச்சு அது நிலுவையில் உள்ளது. அவர் மீது போடபட்ட வழக்கும் இருக்கு அதில் குற்றபத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டாள் பிரச்சனை பொறுத்தவரை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், தேவதாசி முறையை கோவில்களில்  கொண்டு வந்ததே பார்ப்பனர்கள்தான். அதைத்  தவறாகச்  செல்லவிட்டுவிட்டு இன்று ஏன் கொந்தளிக்கிறார்கள்? இன்றும் ஒன்று இரண்டாவது தேவதாசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆந்திராவில் இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் பேர் இருக்காங்க சித்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளிலும் இருக்காங்க. திருவள்ளூரில் கூட இருக்காங்க.  இன்றும் நடைமுறையில்தான் உள்ளது அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள். வெளியே உள்ள பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கச்  சொல்லவில்லை. நீங்கள் உருவாக்கியதே மோசமாக போய் உள்ளதே இங்கே பத்தாயிரம் ஆண்டாள்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே  அதற்கு நீங்க என்ன பண்ணீங்க? இந்த சர்ச்சை யாரைக்  காப்பாற்றுகிறது என்றால் சென்ற மாதம் நூறு கிலோ தங்கம் பெற்று அவை காணவில்லை என்று புகார் வந்தது. இப்போது ஒரு ஆய்வறிக்கை வந்துள்ளது. 25 ஆண்டுகளில் 1200 சிலைகள் கோவில்களிலிருந்து காணாமல் போய் உள்ளதாக உள்ளது. நம் கோவில்களை நம் கண் முன்னாலேயே சீரழிக்கின்றனர். இதனை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இதற்காக ஏன் நீங்கள் குரல்கொடுக்கவில்லை? இது போன்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்தால் பல ஆயிரம் கோடி வெளியே வரும்.

பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள், தலைகீழாக கூட நிற்பார்கள். குஜராத்திலும் மற்ற இடங்களிலும் முஸ்லீம் கலவரம் செய்தது போல் கலவரம் செய்தவர்கள் அது "பிரக்யா தாகுர்" வழக்காக கூட இருக்கட்டும். இந்த கட்சி வளர்ந்தது இந்து தீவிரவாதத்தால்தான். அதனை இங்கு செயல்படுத்த அவர்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும்? இந்த பிரச்சனையை இப்படிதான் பார்க்க முடியும்.


ஒரு அரசியல் மேடையில் நின்று தலையை உருட்டுவேன் என்று பேசலாமா? அங்கு மேடையில் இருந்தவர்கள் சாமியார்களே இல்லை. அவர்கள் பேசாதே கீழே இறங்குனு சொல்லமாட்டாங்களா?  பல ஆண்டாள் சிலை திருட்டுப்போச்சுங்க. அதுக்கு ஒன்னும் பண்ணாமல், அவர்கள் உருவாக்கிய தேவதாசி என்ற வார்த்தையை சொன்னவுடன் கோபம் வருகிறதா? இவர்கள் நன்றாக நாடகம் நடத்துகின்றனர். இந்த பேட்டியிலே சங்கராச்சாரியார் வழக்கு ஒன்று பற்றி சொல்கின்றேன். ஆந்திராவில் விஜயவாடாவில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. நாராயணசாமி என்பவர் மூன்றாயிரம் கோடி கருப்புப்  பணத்தை சங்கராச்சாரியாருக்கு வாங்கிக்  கொடுத்ததாகவும் அதில் எனக்கு சேரவேண்டிய ஒரு சதவீத பங்கு வரவில்லை என்றும் ஒருவர் புகார் கொடுத்து அதற்கு குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எச்.ராஜா என்ன சொல்லபோகிறார்? மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கூறியவர் என்ன செய்யப்போகிறார்? மோடி செல்வதெல்லாம் கிறித்துவ நாடுகளுக்கு. ஆனால் இங்கிருக்கும் கிறிஸ்டியன்களை திட்டுகிறார் எச்.ராஜா. மக்களுக்கு குழப்பம் வேண்டாம். பா.ஜ.க இந்து தீவிரவாதத்தை செயற்படுத்தி பிரச்சனை செய்ய நினைக்கிறது . இவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் கருப்பு பணம் ஒழியவில்லை, ஊழல் அழியவில்லை, எதுவும் நடக்கவில்லை. நாடு  மோசமான நிலைக்குதான் செல்கிறது ஒன்றையும் திருத்தவில்லை. இவர்களின் நோக்கம் எப்படியாவது ஆட்சிக்கு வரணும் அதற்கு பொய் சொல்லணும் ,போட்டோ ஷாப் பண்ணனும். எப்படியாவது ஆட்சிக்கு வரணும்

ad

ad