புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2018

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!

பிலண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத்
தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.
லண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று இலங்கை அரசாங்கத்தின் 70வது சுதந்திர தின விழா நடைபெற்ற இலங்கைக்கான தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டு காணாமல் போன உறவுகள் எங்கே? தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்? போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்த வேளை அங்கே பிரசன்னமாகிய இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மற்றும் தூதரக அதிகாரிகள் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் புகைப்படங்களை எடுத்தனர். ஆனால் மக்கள் தொடர்ந்தும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மக்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
மேலும் இந்த அதிகாரி இறுதிக் கட்ட யுத்தத்தில் பல மனிதவுரிமை மீறல்களிள் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைத்தியசாலை, பாடசாலை ,மற்றும் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகள் மீது குண்டு தாக்குதல்கள் நடாத்திய படையணிக்கு இவர் தலைமை தாங்கியிருந்தார். இந்த அதிகாரியின் கொலை மிரட்டல் செயலானது பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் மனித உரிமைக்கும் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலே ஆகும். இப் போராட்டத்தில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டு இந்த இராணுவ அதிகாரியை பிரித்தானிய சட்டத்திற்கு அமைய கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் அதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் பிரித்தானிய அரசினை வலியுறுத்துவோம்.
2009ஆம் ஆண்டில் தாயகத்தில் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த எம் மக்களைக் காப்பாற்றும் முகமாக எவ்வாறு பிரித்தானிய தமிழ் மக்கள் இளையோர், முதியோர், ஆண், பெண் என அனைவரும் திரண்டெழுந்தோமோ அதே போன்றதோர் எழுச்சிக்கு இன்றுவித்திட வேண்டும்.
எம் இனத்தின் ஒற்றுமையான பேரெழுச்சி நீதிக்கான எம் ஒன்றுபட்ட கோரிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வைப்போம் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ad

ad