புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க விடமாட்டோம்! - மஹிந்த அமரவீர

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் தேடப்பட்டுவந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீண்ட காலமாக வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்படுள்ளார். அதேபோன்று விசாரணைகளிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மஹேந்திரன் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாம் கைது செய்வோம் என்றும் கூறினார். பி​ணைமுறி சர்ச்சை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபொதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தில் பதவி, அந்தஸ்து பார்க்காமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி. கடந்த அரசாங்கத்திலோ இந்த அரசாங்கத்திலோ குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இது தேர்தலுக்காகவோ அரசியலுக்காகவோ இல்லை. நாட்டிலிருந்து ஊழல் மோசடியாளர்களை ஒழிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எந்தவொரு திருடனுக்கும் ஊழல் மோசடியாளருக்கும் சட்டத்திற்கூடாக தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து மக்கள் உரிமையை ரத்துச் செய்ய நாம் அனுமதிக்கப் போவதில்லை. முன்னொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பாராளுமன்றத்துக்கூடாக நீக்கப்பட்டது. இதனை நாம் எதிர்க்கின்றோம். பாராளுமன்றத்தில் மீண்டும் இப்படியொரு நிலை உருவாகக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ad

ad