புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் –

விசாரணைகள் ஆரம்பம்லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier Priyanka Fernando

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?
லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad