புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

தனித்து ஆட்சி அமைக்க ஐதேக திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சி தனியான ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்பட குழுவினர் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சி தனியான ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்பட குழுவினர் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நடைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ஐக்கிய தேசிய கட்சி பொருளாதாரம் மற்றும் அரசியல் சுட்டெண்ணை முன் வைத்து தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று அவசியம் எனவும், ஐக்கிய தேசிய கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்கவே செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் 46 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவையின் முழு எண்ணிக்கை 30யை கடக்கும் ஒப்பந்தத்தின் கீழ் அமைச்சரவையை நியமிக்குமாறு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலில் தமது தொகுதிகளில் தோல்வியடைந்த அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்க கூடாதென இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய 107 உறுப்பினர்களை கொண்டுள்ளது. தனித்து ஆட்சி அமைக்க மேலும் 7 ஏழு உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். ஏழு உறுப்பினர்களை எவ்வாறு கட்சிக்குள் உள்வாங்குவது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ad

ad