புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2018

கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்­டும் என்று மகிந்த ராஜ­பக்ச கங்­க­ணம் கட்­டிச் செயற்­பட்டு வரு­கின்­றார். அதே­போல வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைத்­தெ­றிய வேண்­டும் என்று இங்­கும் பல ராஜ­பக்­சக்­கள் மும்­ம­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். மானிப்­பாய் பிர­தேச சபைக்­கான தேர்­தல் அறிக்கை வெளி­யீட்டு நிகழ்வு மானிப்­பாய் கலா­சார மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது-,

வடக்­கில் தான் நிகழ்த்­திய போர்க்­குற்­றத்தை மறைக்­க­வும், ஆட்­சி­யில் இருந்த போது அவ­ரும் அவ­ரது குடும்­ப­மும் செய்த ஊழல் மோச­டி­களை மறைக்­க­வும் கூட்­டாட்­சியை எப்­ப­டி­யா­வது கவிழ்த்து விட வேண்­டும் என்ற நோக்­கில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பல முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்.

நாம் மகிந்­த­வின் கொடூர ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வந்து ஆட்சி மாற்­றத்தை இந்த நாட்­டில் கொண்டு வந்­தோம். கடந்த அரச தலை­வர் தேர்­த­லின் போது கூட இவ்­வா­றான பரப்­பு­ரைக் கூட்­டங்­களை நாம் நடாத்த வில்லை.

தேர்­த­லுக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னரே மகிந்­தவை தோற்­க­டிக்க மைத்­தி­ரியை ஆத­ரிக்க மக்­க­ளி­டம் கோரி­னோம். நாம் எமது பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும் போது எம்­மீது திட்­ட­மிட்ட பழி­க­ளை­யும், பொய்­க­ளை­யும் கூறி சிலர் விச­மத்­த­ன­மான செயல்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­னர்­னர்.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த என்ற கய­வன் தான்­தான் இம்­மு­றை­யும் வெற்றி பெறு­வேன் என்று ஆனந்­தக் களிப்­பில் இருந்த போது எதிர்­பா­ராத வித­மாக தோல்­வி­ய­டைந்­தார். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்த அவர் தாம் அர­சி­யல் தீர்வை வழங்க இருந்­த­தா­க­வும் அது தொடர்­பாக சம்­பந்­தனை அழைத்த போது அவர் பேச வர­வில்லை என்று அப்­பட்­ட­மான பொய்யை கூறிச் சென்­றி­ருக்­கின்­றார்.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் நாம் உமது உரி­மை­கள் தொடர்­பி­லும் எமக்­கான அர­சி­யல் ரீதி­யான தீர்­வினை பெறு­வது தொடர்­பாக அவ­ரு­டன் சந்­திப்­புக்­களை மேற்­கொண்ட போது அவர் எம்மை உதா­சீ­னம் செய்து தீர்வு பற்­றிய பேச்­சுக்கு இட­ம­ளிக்­காது வந்­தார். இது­தான் உண்­மை­யில் நடந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எடுத்த எடுப்­பில் விமர்­சிக்­கும் கஜேந்­தி­ர­கு­மார், ஆனந்­த­சங்­கரி போன்­றோர் இது வரை காலத்­தில் தமிழ் மக்­க­ளுக்­காக இறங்கி பணி­யாற்றி அவர்­க­ளது சட்­டை­யில் புழுதி பட்­டி­ருக்­கின்­றதா? இந்த இலட்­ச­ணத்­தில் நாம் ஒன்­றை­யும் மக்­க­ளுக்கு செய்­ய­வில்லை என்று எம்மை விமர்­சித்து வரு­கின்­றார்.

ஜி.ஜி.பொன்­னம்­ப­லம் பிர­சித்தி பெற்ற சட்­டத்­த­ரணி. ஆனால் அவ­ரது பேரன் கஜேந்­தி­ர­கு­மார் சட்­டத்­த­ர­ணி­கள் அணி­யும் கறுப்பு கோட்ஸ் அணிந்­ததை நான் இன்­று­வரை காண­வில்லை. ஆனால் அவ­ரு­டன் இருக்­கும் சில சின்ன சட்­டத்­த­ர­ணி­கள் ஏதோ எல்­லாம் கதைக்­கின்­ற­னர்.

வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கை­யில் என்ன இருக்­கின்­றது என்­பதை முழு­மை­யாக படித்து அறி­யாது தங்­க­ளுக்கு ஏற்­ற­வ­கை­யில் கருத்­துக்­களை கூறு­கின்­ற­னர். இவ்­வா­றான மனோ நிலை­யில்­தான் சிலர் உள்­ள­னர்.

மேடை­க­ளில் கூக்­கு­ர­லி­டு­ப­வர்­கள் கேட்­கின்­ற­னர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இத்­தனை நாள்­க­ளாக மக்­க­ளுக்கு என்ன செய்­தது என்று. அவர்­க­ளுக்கு இப்­போது பதில் அளிக்­கின்­றேன். ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இது­வரை கால­மும் விடு­விக்­கவே முடி­யாது என்று கூறி­வந்த மயி­லிட்டி துறை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய காணி­கள், கேப்­பாப்­பி­லவு பகு­தி­யில் ஒரு­ப­குதி, மேலும் பல காணி விடு­விப்­புக்­கள், மீள்­கு­டி­யேற்­றம், அதன் விளை­வாக 50 ஆயி­ரம் கல்­வீ­டு­கள் நடப்­பாண்­டும் கிடைத்­துள்­ளது. இதனை விட முக்­கி­ய­மாக அர­சி­யல் தீர்­வின் ஆரம்ப படி­யில் உள்­ளோம் – என்­றார்.

ad

ad