புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, மார்ச் 18, 2018

காணாமல் போகச்செய்தால் 20 வருட கடூழியச் சிறை!

பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது. அத்துடன் 1 மில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதிக்கப்படும்.
பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது. அத்துடன் 1 மில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு, குற்றவாளி 500,000 ரூபாய் நட்டஈடும்வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பலவந்தமாக காணாமல் போதல்களுக்கு உதவுதல் மற்றும் பின்புலமாக செயற்படுதல்,பலவந்தமாக ஒருவரை காணாமல் போகச் செய்வதற்கான சூழ்ச்சிகளை புரிதல் மற்றும்முயற்சித்தல் என்பன குற்றங்களாக அறிவிக்கப்படவுள்ளன.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பலவந்தமாக காணாமல் போதல்களில்இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்தின் கீழ் இந்த தண்டனைசட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொள்கிறது. அத்துடன் இவ்வாறான காணாமல் போதல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்அதிகாரம், கொழும்பில் உள்ள மேல்மாகாண உயர்நீதிமன்றத்துக்குபாரப்படுத்தப்படவுள்ளது.