தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், மார்ச் 12, 2018

நேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி

நேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில்முதலில் 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது பலியானோர் எண்ணிக்கை 50 பேராக உயர்ந்திருப்பதாக விமான நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது.

வங்கதேசத்தில் இருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. பயணிகள் நிலைமை குறித்து உறுதியான தகவலும் இல்லை. விமான நிலையத்தில் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமானத்தில் 67 பேர் இருந்ததாகவும், 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல் தெரிவித்தது.

விபத்தையொட்டி காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் விமானங்கள் திருப்பி அனுப்பி வரப்பட்டு வருகிறது.