www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மார்ச் 10, 2018

வன்முறைகளில் ஈடுபட்ட 65 பேர் ஒரே நாளில் கைது! - வழமைக்குத் திரும்புகிறது கண்டி

கண்டி, திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 65 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 04ஆம் திகதி முதல் நேற்று அதிகாலை வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் மொத்தமாக 146 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கண்டி, திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 65 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 04ஆம் திகதி முதல் நேற்று அதிகாலை வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் மொத்தமாக 146 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச் செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் :-

கடந்த 24 மணிநேரத்திற்குள் கண்டி – 06, தெல்தெனிய – 06, கடுகஸ்தோட்டை – 11, வத்தேகம – 7, பல்லேகல – 4, ஹசலக – 3, கடுகன்னாவ – 3, ஹதரலியந்த – 7 மற்றும் அலவத்துகொட 18 என்ற அடிப்படையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 65 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர ஊரங்கு சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றை தினம் மாத்திரம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன் பிரகாரம் இதுவரை மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அவசரகால நிலைமையின் கீழ் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும்பட்சத்தில் 7 வருட சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்றார்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் வீடுகள் மற்றும் கடைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் 4 மற்றும் ஹசலக பொலிஸ் பிரிவில் 2 என்ற அடிப்படையில் 6 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் கடந்த 4ஆம் திகதி முதல் இதுவரை 51 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

கண்டியில் நேற்றைய தினம் நிலைமை முழுமையாக அமைதியான நிலை காணப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நேற்றும் ஐந்தாவது நாளாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கமைய நேற்று இரவு 8.00 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எனினும் கண்டி மாநகர பிரதேசத்தை தவிர்ந்த பகுதிகளிலேயே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார் என்றார். நிலைமை தொடர்ந்தும் சுமுகமாகும் பட்சத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நேரம் குறைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு நிலைமை

கண்டி உட்பட நாடு முழுவதிலும் நேற்றைய தினம் முற்றிலும் அமைதியான நிலைமையே காணப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். எனினும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு புலனாய்வு அறிக்கை கிடைக்கும் வரை முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்த அவர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க களத்தில் இருந்து பல்வேறு தரப்பினர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் எதிர்வரும் வெசாக் தினத்திற்கு முன்னர் படையினரால் முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.